வேதாந்த அறிவுக்கும், மோட்சப் பிராப்திக்கும் உரியவர் கேது. புரசு மரத்தின் செந்நிறம் கொண்டவர். நட்சத்திரங்கள், கிரகங்களில் தலையானவர். மிகுந்த கோபமுள்ளவர். அந்த கேதுவைப் பணிந்து சிலவற்றை இங்கு காண்போம்.

Advertisment

நட்சத்திரங்கள், கிரகங்களின் சார இடைவெளியினை அளக்க அளவுகோல்போல இருப்பதால், அவர்களின் தலைவன் எனப்படுகிறார். எந்த ஒரு பிரச்சினையிலிருந்தும் விமோசனம் பெறுவ தற்குக் காரகம் உள்ளவர். கேது தசையில் ராகு புக்தி வரக்கூடாது. அந்த காலகட்டங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கேது ஒருவருடைய ஜாதகத்தில் பகை, நீசம் பெற்றால் தேசாந்திரியாக்கும். வியாதி, கண்டம், எப்போதும் முடிவுக்கு வராத பிரச்சினைகள், உறவுகளில் கருமம் போன்ற துர்ப் பலன்களைக் கொடுப்பார்.

k

கேது பகவான் நட்பு, உச்சம் பெற்றால் மேற்சொன்ன அனைத் திற்கும் நேர்மாறாக இருப்பார். எடுத்த காரியங்களை முடிக்க வைப்பார். வியாதியிலிலிருந்து நிவாரணம் தருவார். பகைவரை முறியடிப்பார். தேர்ந்த மருத்துவர்களை உருவாக்குவார். பசியை உண்டுபண்ணுவார். உறவை ஏற்படுத்துவார்.

Advertisment

கண் நோய்க்கும், புண்ணுக்கும் காரணமானவர். காய்ச்சலை ஏற்படுத்துவார். நாய், மான், கழுகு, சேவல் மற்றும் கொம் புள்ள பிராணிகளுக்குகாரக முடையவர். பலவீனமான உடல்நிலையை ஏற்படுத்துவதுடன் மன நோயையும் உருவாக்குவார். விபத்துகளையும், தகாத சகவாசத்தையும் ஏற்படுத்தி தொல்லை கொடுப்பார். தாய் வழிப் பாட்டனை இவரை வைத்து தெரிந்துகொள்ளலாம். ஒருவருடைய ஜாதகத்தில் கேதுவின் பலன் நிறைந்திருக்குமேயானால் இரு உலகங்களிலும் சுகம்பெறச் செய்வார். செவ்வாய்க்குரிய பலன்கள் கேதுவுக்கும் பொருந்தும்.

செந்நிறத்தோன் என்றாலும் கலப்பு நிறத்தோனும்கூட. ஆண், பெண், அலிஎன்ற பிரிவில் அலிஇவர். தாமச குணமுள்ளவர். பஞ்சபூதங்களில் நீர். நீச பாஷைகளில் தேர்ச்சியுள்ளவர். புளிப்புச் சுவைப்பிரியர். இவர் விருச்சிகத்தில் உச்சமானவர். ரிஷபத்தில் நீசமானவர். மீனத்தை சொந்த வீடாகக் கொண்டவர். இவரது ரத்தினம் வைடூரியம். பாவகிரகங்களில் ஒருவராகக் கருதப்படும் இவர் பாவவிமோசனத்திற்கும் அதிபதியாவார். புதன், சுக்கிரன், சனி நண்பர்கள். குரு, சூரியன், சந்திரன் பகைவர்கள்.

மோகினியால் துண்டிக்கப்பட்ட உடல்தான் கேது. மகாவிஷ்ணுவை வேண்டித் தவம்புரிந்த கேதுவுக்கு அவரது அருளால் பாம்புத் தலை அமைந்தது.

மகா கேது, சர்வ கேது என்றும் பெயர்கள் உண்டு.

கொடி போன்ற இருக்கை யில் அமர்ந்திருப்பவர்.

Advertisment

தீட்சிதர், "மஹாஸுரம் கேது மஹம்பஜாமி' என்று தொடங்கும் கீர்த்தனையில், "மிகுந்த கோபம் உடையவர்; ஞானியருக்கு ஆபரணமாக இருப்பவர்' என்று கூறுகிறார். பரந்த உலகத்தில் நாளுக்குநாள் விரிவடைந்து கொண்டிருக்கும் மெய்ஞ்ஞானத்துறைகள் அனைத்தையும் அடக்கி ஆளுகின்ற ஆற்றல் உடையவர் கேது. சிவபக்தியில் பிரியமுடையவர். அதீதமான தவவேள்வியில் ஈடுபடுத்துவார்.

எளிமை, கடுமை இரண்டுக்கும் உரியவர். மதக் கோட்பாடுகளிலும், பக்தி நெறிகளிலும் ஈடுபாடு கொள்ளச் செய்வார். உலக பந்தங் களிலிலிருந்து விடுவிப்பார். பலதரப்பட்ட உலகின ரோடு பழகும் வாய்ப்பு பெறவும், சுபிட்சங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் சகல பந்தங்களிலிலிருந்து விடுதலை பெறவும் அருள் பாலிலிக்கும் ஞானகாரகர் கேதுவை வழிபடு வோம். அவர் அருள்வேண்டி கீழுள்ள பரிகாரங்களைச் செய்வோம்.

பரிகாரம்- 1

27 கானப்பயிர் (கொள்ளு) எடுத்து வெள்ளைத்துணியில் முடிந்து சுவாமி அறையில் வைத்து வணங்க, கேதுவின் தாக்கம் குறையும். வளர்ச்சி மேம்படும்.

பரிகாரம்- 2

கேது தசை, கேது புக்தி, கேது அந்தரம் நடப் பவர்கள் கீழுள்ள எளிய பரிகாரம் செய்யலாம்.

தேங்காய் 9, வாழைப்பழம் 18, கொட்டைப் பாக்கு 18, வெற்றிலை 50 கிராம், கதம்ப மாலை 9 முழம் ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிமுதல் 10.00 மணிக்குள் நவகிரக சந்நிதியில், எமகண்ட நேரத்தில் கொடுத்து அர்ச் சனை செய்யவேண்டும். மேலும் காலை 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் நவகிரக சந்நிதி அமைந் துள்ள கோவிலிலில் அர்ச்சனை செய்து, பிரசா தத்தை வீட்டிற்குக் கொண்டு வரலாம். ஒருமுறை செய்தால் போதும்.

பரிகாரம்- 3

வசதியுள்ளவர்கள் கும்பகோணம் அருகே கீழ்ப்பெரும்பள்ளத்தில் அமைந்துள்ள கேது பகவானுக்கு அர்ச்சனை செய்துவர நன்மைகள் நடக்கும். ஒருமுறை செய்தால் போதும்.

செல்: 94871 68174